பதிவு வழிமுறைகள்
பதிவைத் தொடங்குவதற்கு முன் படிக்கவும்
பதிவு செயல்முறையை எளிதாக்க கீழே உள்ள வழிமுறைகளை கவனமாகப் படிக்கவும்.
- 1மொழி மாற்று: ஆங்கிலம் / தமிழ் – உங்களுக்கு வசதியான மொழியைத் தேர்வு செய்யலாம்.
- 2கட்டாயப் புலங்கள்: நட்சத்திரக் குறியீடு (*) உள்ள எல்லாப் புலங்களும் கண்டிப்பாக நிரப்பப்பட வேண்டும்.
- 3தயார் நிலை: பதிவு தொடங்கும் முன், குடும்பத்தில் அனைவரின் பிறந்த தேதி, கல்வி, பணி விவரங்களைத் தயாராக வைக்கவும்.
- 4ஒரு குடும்பம், ஒரு பதிவு: ஒரே முகவரியில் வசிக்கும் குடும்பத்திற்கு ஒரு முறை மட்டுமே பதிவு. சரியான தகவல்களைப் பகிரவும்.
- 5வயது: வயதை முழு எண்ணாக உள்ளிடவும் (எ.கா., 25)
- 6தொழில்வகை - தொழில் விவரங்கள் (முழுமையாகத் தரவும்):
நீங்கள் கடை நடத்தி வந்தால் அல்லது சுயமாக தொழில் செய்து வந்தால் - "தொழில்வகை" டிராப்-டவுனில் "சுயதொழில் / வியாபாரம்" என்று தேர்ந்தெடுக்கவும். "தொழில் விவரங்கள்" பகுதியில் உங்கள் கடை / தொழில் பெயர் மற்றும் அதன் முழு முகவரியையும் தரவும் (எ.கா: "ஐவனம் இயற்கை அங்காடி, திருச்சி 620021")
நீங்கள் அரசாங்க பணியில் இருந்தால் "தொழில்வகை" டிராப்-டவுனில் "அரசுப் பணி" என்று தேர்ந்தெடுக்கவும். "தொழில் விவரங்கள்" பகுதியில் உங்கள் பதவி, அரசாங்கத் துறை மற்றும் பணியின் இடம் போன்ற தகவல்களை தரவும் (எ.கா: "DE, தமிழ்நாடு மின்சார வாரியம், திருச்சி")
இது போல உங்கள் தொழில் வகைக்கான சரியான டிராப்-டவுனை தேர்ந்தெடுத்து, உங்கள் முழு தொழில் விவரங்களைத் தரவும்.
நமது சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உங்கள் முழுமையானத் தகவல்கள் உதவும். - 7குழந்தைகள் விவரங்கள்: குழந்தை இருந்தால், "+ குழந்தை" பொத்தானை அழுத்திப் பதிவு செய்யவும்.
- 816 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மொபைல் எண் இருந்தால் கொடுக்கலாம்.
- 9திருமணமான குழந்தை வேறு முகவரியில் வசித்தால், அவர்கள் தனியாகப் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் "திருமணமானவர்" எனக் குறிப்பிட்டால் போதும்.
- 10உங்களுடன் வசிக்கும் பிற குடும்ப உறுப்பினர்கள்: பெற்றோர், உடன்பிறப்புகள், உறவினர்கள் – ஒவ்வொருவரையும் "+ உறவுமுறை" பொத்தானை அழுத்திப் பதிவு செய்யவும்.
- 11உறுதிப்படுத்தலுக்கு உதவி (விருப்பம்): "வேறு ஏதேனும் விவரங்கள்" பகுதியில் ஆறுநாட்டு வேளாளர் சங்கங்களுடன் தொடர்புள்ள நபர்களின் தகவலைத் தரலாம். இது உங்கள் பதிவை விரைவாக உறுதிப்படுத்த உதவும். இல்லையெனில், நாங்களே உங்களை அழைத்துச் சரிபார்ப்போம்.
- 12தரவுப் பாதுகாப்பு: உங்கள் தரவு பாதுகாப்பாகச் சேமிக்கப்படும். சமூக நலன் மற்றும் மேம்பாட்டு நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
